முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்

வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடலான ’தீ தளபதி’ வெளியாகியுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியானது. இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ’வாரிசு’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ரஞ்சிதமே பாடல் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்த புது சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகியுள்ளது. ’தீ தளபதி’ என்ற இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இசையமைப்பாளர் தமனின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடலை வெளியிட்டு படக்குழு ட்ரீட் வைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

Halley Karthik

மத்திய அரசு வரி வருவாயை முழுமையாக கொடுக்கவில்லை

G SaravanaKumar

திருவள்ளுவர் தின வாழ்த்து சொன்ன பாஜக அண்ணாமலை: பதில் சொன்ன எம்.பி கனிமொழி

Web Editor