முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஜி-20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்; நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்

ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அலோசிக்க அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி
பழனிசாமிக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறையிலிருந்து அழைப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நாளை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதை
ஒட்டி, அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை
செலுத்துகிறார். பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு, நாளை மாலை பிரதமர் தலைமையில்
நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி தனியாக சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘தமிழ்நாடு இருண்ட ஆட்சியில் இருந்ததற்கு சமத்துவபுர திட்டம் கிடப்பில் போடப்பட்டதே சிறந்த உதாரணம்’

Arivazhagan Chinnasamy

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு; ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

Halley Karthik

முதலமைச்சர் பழனிசாமியால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது! – மு.க.ஸ்டாலின்

Saravana