இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் 1,11,000 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும், கழகத்தின் மூத்த முன்னோடிகள், இளைஞர்கள், கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் எல்லோரையும் கண்டுபிடித்து, அவர்களுக்கு பதவி வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டு தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என்று முதலமைச்சர் பிரித்துப் பார்ப்பதில்லை. வட மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்களையும், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் போல் நினைத்து, அவர்களுக்கும் பாதுகாப்பு அளித்து வாழ்வளிக்கும் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் நடத்தி வருகிறார். இதன்மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். பெரம்பலூரிலும் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து, 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலையை வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.