முக்கியச் செய்திகள் குற்றம் Instagram News

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

பல்லடத்தில் குடும்ப சொத்துக்காக அண்ணனை கடத்தி, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பெங்களூருவில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்த பொன்னுசாமி
என்பவருக்கு சிவக்குமார் என்ற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர். சிவக்குமார்
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை அம்பிகாவுக்கு திருமணமான
நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொன்னுசாமி
இறந்து விட்ட நிலையில் அவரது சொத்துக்கள் சிவக்குமார் பெயருக்கு மாற்றப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிவக்குமாருக்கு பெருமாநல்லூரிலும், கோயமுத்தூர் மாவட்டம், சுல்தான் பேட்டையிலும் 3 ½ ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது. சிவக்குமாருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் பெற்றோர்களின் சொத்துக்களை அம்பிகா குடும்பத்தினர் தங்ககளுக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி அடிக்கடி சிவக்குமாரிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25.01.2023 ஆம் தேதி சேடபாளையத்தில் உள்ள தனது நண்பர் வடிவேல் என்பவரது வீட்டுக்கு சிவக்குமார் வந்துள்ளார். அங்கு வந்த சிவக்குமாரின் தங்கை அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மூத்தமகன் கோகுல் மற்றும் சிலர் சிவக்குமாரை வாயை மூடி கயிற்றால் கட்டி மாருதி ஈக்கோ வண்டியில் வலுகட்டாயமாக ஏற்றிக் கொண்டு அறிவொளிநகரில் உள்ள அம்பிகாவுக்கு சொந்தமான வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கையாலும்,
கட்டையாலும் அடித்ததாக கூறப்படுகிறது. அடி தாங்க முடியாமல் சிவக்குமார் என்ன
சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து சிவக்குமாரை கீழே இறக்கி அம்பிகா, வேலுசாமி, கோகுல் ஆகியோர்கள் 21 ஸ்டாம்ப் பேப்பரில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, சிவக்குமார் அணிந்திருந்த
பிரேஸ்லெட், மோதிரம், செயின் மற்றும் அவர் வைத்திருந்த பணம் ரூ 1,55,000/- மும்,
மற்றும் தெக்கலூரில் உள்ள வீடு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும்
பறித்துள்ளனர். அதனை தொடர்ந்து இரண்டு கார்களில் சிவக்குமாரையும் ஏற்றி கொண்டு
பெங்களூர் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சிவக்குமாரை வலுக்கட்டாயமாக மது
அருந்த வைத்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்து பார்த்த போது சிவக்குமார் பெங்களூரில் உள்ள ஒரு மனநல
காப்பகத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை
கூறி வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் சோமனூர் சங்கீதா தியேட்டரின் உரிமையாளரான
அவரது மாமா ராமமூர்த்தி ஆகியோருக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்ற
அவர்கள் சிவக்குமாரை மீட்டு பல்லடம் அழைத்து வந்துள்ளனர்.

பல்லடம் காவல் நிலையத்திற்கு வந்த சிவக்குமார் தன்னை கடத்தி தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற அம்பிகா, அவரது கணவர் வேலுச்சாமி, அவரது மூத்தமகன் கோகுல், மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்
விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் கோகுல் மற்றும் வேலுச்சாமியை கைது
செய்தனர். கோகுல் என்பவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நிலை குறைவு காரணமாக கைது செய்யப்பட்ட வேலுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிவக்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள அம்பிகா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்துக்காக தங்கையே அண்ணனை கடத்தி மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது சிம்புவின் ‘பத்து தல’; ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Jayasheeba

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்

EZHILARASAN D

அதிமுக அலுவலக சீல் வழக்கு ; நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

Arivazhagan Chinnasamy