’அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம்’ – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சினிமாவில் எடிட்டர் ஆகலாம் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மீது அவதூறு பரப்பும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். டி.ஆர்.பாலுவின் முழு பேச்சு வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலை, வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார். திமுகவை குறைகூற எதுவும் இல்லை என்பதால் திமுகவினர் பேசுவதை வெட்டி ஒட்டி பாஜகவை வளர்க்கலாம் என அண்ணாமலை முயற்சி செய்கிறார்.

டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்த போது, சாலைகள் அமைக்கும் பணிக்காக சில
இடங்கள் அகற்றப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. கோயிலை, டி.ஆர்.பாலு இடித்ததாக
குற்றச்சாட்டு வந்ததே இல்லை. அண்ணாமலை, திரைத்துறையில் எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுகவை இந்து விரோத கட்சியாக காட்ட, பாஜக முயற்சி செய்கின்றனர். திமுகவுக்கு இந்துக்கள் வாக்களிக்கின்றனர். பாஜகவை புறக்கணிக்கின்றனர். பாஜக ஏமாற்றுகின்றனர் என்பது மக்களுக்கு தெரியும்.

ஈரோடு இடைத்தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. தேர்தல் வேலைக்கு எல்லா கட்சிகளும் செலவு செய்வார்கள். அதை தான் அமைச்சர் கே.என் நேரு சொல்லி இருப்பார். திமுக எதற்காக தனித்து போட்டியிட வேண்டும்? பாஜகவின் கொள்கை மக்கள் விரோத கொள்கை. அவர்களை எதிர்த்து நாங்கள் அனைவரும் இணைந்து போட்டியிடுகிறோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.