தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் வீடியோ போலி! NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!

கேரளாவில் சாலையில் வரையப்பட்ட தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்வதாக வைரல் ஆகும் வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.  சாலையில் இந்திய முவர்ண கொடியின் வர்ணங்கள் பூசப்பட்ட நிலையில், அதன் மீது பாகிஸ்தான் கொடியுடன்…

கேரளாவில் சாலையில் வரையப்பட்ட தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்வதாக வைரல் ஆகும் வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது. 

சாலையில் இந்திய முவர்ண கொடியின் வர்ணங்கள் பூசப்பட்ட நிலையில், அதன் மீது பாகிஸ்தான் கொடியுடன் வாகனங்கள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த நிகழ்வு கேரளாவில் நடந்ததாகவும் கூறப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/mjoshi50/status/1787731929204486396?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1787731929204486396%7Ctwgr%5E3907c85778d45fd3834019e0211caa002d93131f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnewsmeter.in%2Ffact-check%2Fold-video-from-pakistan-falsely-shared-as-recent-from-kerela-728929

மேலும், இந்த வீடியோவை உங்களால் முடிந்த அளவு பரப்புங்கள், இன்று அமைதியாக இந்தால் நஷ்டம் நமக்குதான் என பதிவிட்டு பயனர்கள் சமூக வலைதள பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த காணொலி பரவுவது முதன்முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த வீடியோ அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை செய்தி சரிபார்ப்பு சோதனை:

NewsMeter-ன் உண்மை செய்தி சரிபார்ப்பு சோதனையில் இந்த வைரல் வீடியோ 2020-ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பது உறுதியானது. அதோடு இந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டது அல்ல, பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதியாகியுள்ளது.

இதன்படி, NewsMeter-ன் உண்மை செய்தி சரிபார்ப்பு சோதனை முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

வைரல் ஆன வீடியோவை முழுமையாக ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் கொடி மற்றும் ஆட்டோக்களின் தனித்துவமான நிறம் ஆகியவற்றை கவனித்தோம். இதன் வாயிலாக இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பது உறுதியானது. இதை கருத்தில் கொண்டு கேரளாவில் இது போன்ற நிகழ்வு ஏதும் நடந்ததா என்பது குறித்தும் தேடினோம். ஆனால் கேராளாவில் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக தகவல் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து வீடியோவில் உள்ள குறிப்பிடத்தகுந்த காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடல் முறையில் ஆய்வு செய்ததில் X தள பக்கத்தில் 2020-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

https://twitter.com/arifaajakia/status/1237441595437441031?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1237441595437441031%7Ctwgr%5E3907c85778d45fd3834019e0211caa002d93131f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnewsmeter.in%2Ffact-check%2Fold-video-from-pakistan-falsely-shared-as-recent-from-kerela-728929

இதன் வாயிலாக இந்த வீடியோ சமீபத்தியது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து எங்களது தொடர் தேடுதலின் வாயிலாக வைரல் வீடியோவை முழுமையாக கண்டறிந்தோம். இந்த வீடியோவில் தி ஹூனார் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு வேன் இருந்தது. இந்த ஹூனார் அறக்கட்டளை இளைஞர்களை பொருளாதார அளவில் மேம்படுத்த தொழில் பயிற்சி வழங்கி வருகிறது. Google – படி கராச்சியில் இந்த அறக்கட்டளை இயங்குகிறது. இந்த விவரம் இந்திய தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் காட்சி பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் படமாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளை வலுப்படுத்துகிறது.

இதனை அடுத்து பச்சை நிறத்தில் ‘PTCL’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற வாகனம் வீடியோவில் இருந்தது. இது குறித்து விசாரித்ததில் ‘PTCL’ என்பது பாகிஸ்தானின் தேசிய தொலைதொடர்பு நிறுவனமான பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் லிமிடெட் என்பதை குறிக்கிறது.

ஆதாரம் (Facebook/Google)

இறுதியாக வீடியோவில் Sanam Boutique என்ற பெயர் பலகையுடன் ஒரு கடையை கவனித்தோம். Keyword search வாயிலாக தேடியதில் Sanam Boutique கடை கராச்சியில் இருப்பது உறுதியானது. தொடர் தேடுதலில் பாகிஸ்தானின் கராச்சியில் தாரிக் சாலையில் ‘Sanam Boutique’ அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து கூகுள் மேப் வாயிலாக இந்திய எதிர்ப்பு பேரணி சரியாக நடந்த இடம் கண்டறியப்பட்டது.

(ஆதாரம் : Google Maps)

இதன் வாயிலாக இந்திய தேசிய கொடியின் மீது வாகனங்கள் ஏற்றப்பட்ட இந்த நிகழ்வு கேரளாவிலோ, தமிழ்நாட்டிலோ நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ பாகிஸ்தானின் கராச்சி நகரில் படமாக்கப்பட்டதே ஆகும்.

Note : This story was originally published by ‘NewsMeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective –

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.