இந்தியாசெய்திகள்

10 சிங்கங்களின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்…குவியும் பாராட்டு!

குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்களை பார்த்து அவசர கால பிரேக்கை அழுத்தி,  அவற்றின் உயிரை ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். 

குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த சிங்கங்களைக் கண்டதும்,  அவசர கால பிரேக்கை அழுத்தி,  சரக்கு ரயிலை நிறுத்தியுள்ளார் ரயிலின் ஓட்டுநர்.  இதனால் 10 சிங்கங்கள் உயிர் தப்பியுள்ளன.  இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இது தொடர்பாக பாவ்நகர் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“அமரேலி மாவட்டத்தின் பிபாவாவ் துறைமுகம் அருகே அமைந்துள்ள தண்டவாளத்தில் இச் சம்பவம் நிகழ்ந்தது.  தண்டவாளத்தில் சுமார் 10 சிங்கங்கள் அமர்ந்திருப்பதை பார்த்த சரக்கு ரயில் ஓட்டுநர் முகேஷ் குமார் மீனா,  உடனடியாக அவசர பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினார்.  இதனால்,  சிங்கங்கள் உயிர்தப்பின.  சிங்கங்கள் தண்டவாளத்தைக் கடக்கும் வரை ரயில் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இயக்கப்பட்டது.  ஓட்டுநரின் இந்தச் செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

கிர் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கணிசமான தொலைவில் பிபாவாவ் துறைமுகம் அமைந்திருந்தாலும்,  கடந்த சில ஆண்டுகளில் பல சிங்கங்கள் இந்த வழித்தடத்தில் உயிரிழந்துள்ளன.  எனவே,  சிங்கம் மற்றும் பிற வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக பாவ்நகர் ரயில்வே துறை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இந்த வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருந்து,  நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பில் ரயிலை இயக்குகிறார்கள்” எனத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அதிமுக விதிமுறை மாற்றம் தொடர்பான வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு!

Web Editor

வேலூர் ஹிஜாப் விவகாரம்: வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் – எஸ்பி ராஜேஷ் கண்ணன்

Web Editor

பீகார் தொழிலாளர்கள் கட்டிய தரமற்ற கட்டடங்கள்: ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் குற்றச்சாட்டு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading