பிஸ்கெட் போட்ட சிறுவனை கடித்த தெருநாய்!

சென்னை மயிலாப்பூரில் தெரு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்த நிலையில்,  அவர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.  சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்…

சென்னை மயிலாப்பூரில் தெரு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்த நிலையில்,  அவர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். 

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம்.  இவரின் 6 வயது மகன் நேற்று இரவு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த சிறுவன் தனது கையில் இருந்த பிஸ்கெட்டை தெரு நாய்க்கு கொடுத்தார்.

அச்சமயத்தில் அந்த நாய் சிறுவனை கடித்துள்ளது.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி சிறுவனை மீட்டனர்.   நாய் கடித்ததில் சிறுவனுக்கு முகம்,  தோள்பட்டை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.   இதனையடுத்து அச்சிறுவன் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மெரினா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,  மாநாகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.