25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 17 வெளியாகும் எனத் தகவல்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூன் 17-ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக அதாவது 2016-ரிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம். விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படம் பொருளாதாரக் காரணங்களால் வெளியாவதில் தாமதமானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் படத்தின் இறுதிகட்டப்பணிகள் தொடங்கியதை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உறுதிப்படுத்தினார். மேலும் பின்னணி இசை வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் கூறினார்.  இதனால் ரயிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. இதனை தொடர்ந்து வரும் 17-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் ஹாரீஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.  அதோடு பட குழு ஜூலை 14 ஆம் தேதி திரையரங்கிற்கு படத்தை கொண்டுவர தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ள. இந்த செய்தி விக்ரம் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

விபத்து குறித்து டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோ… தன்னை தவறாக சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டு…

Web Editor

நேபாளத்தில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுடால் பதவியேற்பு!

Web Editor

பாராட்டிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய துரைமுருகன்

G SaravanaKumar