தஞ்சை மாவட்டம் திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகள் 179 வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தனை கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் 179-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு வருகிற 24-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.







