ரீ-ரிலீசாகும் ’தெறி’ படத்தின் டிரெய்லர் வெளியானது…!

ரீ-ரிலீசாகும் நடிகர் விஜயின் ’தெறி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் படதிற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இது விஜயின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

இதனிடையே தயாரிப்பாளர் தாணு ஜனவரி 15 அன்று அட்லி இயக்கத்தில் விஜய் சமந்த ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ படம் ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவித்தார். ஆனால் புதிதாக பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களின் தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கையை ஏற்று ‘தெறி’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில் தெறி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி தெறி திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகிறது. அதே நேரம் நடிகர் அஜித்தின் ’மங்காத்தா’ திரைப்படமும் ஜனவரி 23 ஆம் தேதி ரீ-ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ரீ-ரிலீசாகும் தெறி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.