இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து தொடரை யார் கைப்பற்ருவது என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி அட்டக்காரர்களான டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷத் ராணா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 338 ரன்கள் குவித்தால் வெற்றி இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.







