“தவெக அரசு 5 ஆண்டுகளுக்கு தொடரும்” – திருமாவளவன்

தவெக அரசு கவிழ வாய்ப்பில்லை 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ எங்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக கழக அரசு கவிழ வாய்ப்பில்லை. 5 ஆண்டுகளுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இந்த அரசு இயங்கும்.

உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல் வரை என்னென்ன தேவைகள் வேண்டும் தெரிவித்து தான் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்தார்கள். இடதுசாரி கட்சிகளும் ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுத்துள்ளார்கள், அதே நிலைப்பாட்டில் தான் விசிகவும் ஆதரவு தெரிவித்தது.

அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது மிகப்பெரிய பிரச்சனை. இது ஏன் என்பதை அதிமுக தான் தெளிவுபடுத்த வேண்டும்.

முதலமைச்சர் சாதியின் அடையாளங்களை ஊக்கப்படுத்துவதை விரும்பவில்லை என்பதை வரவேற்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.