“தமிழக சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல் உள்ளது” – சீமான் பேச்சு!

சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழர்கள் ஆள்கிறார்கள் என பெருமிதம் கொள்ள முடியாது. தமிழன் ஆள்வதல்ல கனவு, தமிழன் தமிழனாக ஆள வேண்டும், தமிழுக்கும் தமிழருக்குமாக ஆள வேண்டும் தமிழனாக பிறந்தவன் எல்லாம் தமிழன் அல்ல;

இங்கு காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் துரோகம் செய்தவன் எல்லாம் நம் ரத்த சொந்தமாக இருக்கிறான். தமிழனுக்கு வீரமும், மானமும் உடன் பிறந்தது போல துரோகமும் உடன் பிறந்திருக்கிறது. நம் பாட்டனுக்கும் பாட்டிக்கும் துரோகம், உடன் பிறந்தவன் ரத்த துரோகம் தமிழன் ஆள வேண்டும் என சொல்லவில்லை, புரட்சித் தமிழாய்ந்த தமிழ் மகன் தமிழ்தாட்டை ஆள வேண்டும்.

தமிழை பார்த்து படிக்கும் போதே 10, 20 தவறுகள் வருகிறது. இந்த இனத்திற்கு எவ்வளவோ பிரச்சனைகள் வந்துள்ளது போராடியிருக்கோம். சர்க்கார் பட நோட்டீஸை கிழித்தது தான் சர்வதேச பிரச்சனை என்கிறார்கள். மீனவனை சுட்டால், காவிரி நீர் மீட்கப்படவில்லை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்தது Is not Our Problem Only Sarkar Poster Our Problem என்பது போல உள்ளனர்.

சட்டமன்றம் தியேட்டர் போல உள்ளது; சட்டமன்றத்தில் All Is well சொல்லுனு சொல்றாங்க. உங்களை தற்குறி என கூறுவதே பெருமைக்குரிய வார்த்தை. காமராசர் பல்கலைகழக கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என பேசுகிறார்கள். முதலமைச்சரை பார்க்க LED வேண்டும் என்கிறார்கள், அதையும் ரசிக்கிறார்கள், சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போலவே உள்ளது அருமையான எண்டர்டெயிண்மெண்டாக இருக்கிறது. மேட்டூர் அணையை கட்ட அந்த காலகட்டத்தில் 10 கோடி தான் செலவாகிருக்கும், ஆனால் அதனை திறக்க செல்ல 6 கோடி செலவாகிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.