திமுகவினர் தங்களது சொத்துக் கணக்குகளை வெளியிடத் தயாரா? – அமைச்சர் விஸ்வநாதன்!

திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான அமைச்சர் P.விஸ்வநாதன் புதிய துணை மின் நிலையம் ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசியவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பே முக்கியக் காரணம் என்று திமுகவினரின் விமர்சனங்களுக்கும் கடுமையாகப் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம்பெறாமல் இருந்திருந்தால், திமுகவுக்கு இத்தகைய வெற்றி கிடைத்திருக்காது எனக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்பது குறித்தும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், மேலூர் தொகுதி மக்களுக்கு ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதே தனது இலக்கு.

திமுகவினர் தங்களது சொத்துக் கணக்குகளை வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் தன் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து துணிச்சலாகச் செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.