நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகினரின் இரங்கல் செய்திகளை இந்த தொகுப்பில் காணாலாம்..
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா
“எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்-ன் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கிறது. விஜயகாந்த்-ன் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத்
துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
கவிஞர் வைரமுத்து
“எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன் உயிரிழந்து போனார். கலைஞர், ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் அரசியல் செய்த காலத்திலேயே அரசியலில் குதித்தவர். கண்ணீர் விடும் குடும்பத்தார்க்கும் கதறி அழும் கட்சித் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
https://twitter.com/Vairamuthu/status/1740229907136053605?t=D2yN_w_HwUs2BIYfZPu9-g&s=19
நடிகர் விக்ரம்
“மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரான கேப்டன் விஜயகாந்த் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் கேப்டன்”
https://twitter.com/chiyaan/status/1740215412326076681?t=0d3KGgQ92mStLO43cPeKTg&s=19
பாலிவுட் நடிகர் சோனு சூட்
“கள்ளழகர் திரைப்படம் தான் எனது முதல் படம். இது எனக்கு லெஜண்ட் விஜயகாந்த் சார் கொடுத்த பரிசு, நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். RIP கேப்டன்”
https://twitter.com/SonuSood/status/1740240375565230586?t=wA1jRIMmu4GtEBMN7Wsclw&s=08
நடிகை த்ரிஷா
“RIP கேப்டன்.. பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். உங்கள் அன்பை நான் என்றென்றும் நினைவில் கொள்வேன்”
https://twitter.com/trishtrashers/status/1740231382054629615?t=2oxHT4lP4bKvgNBVWo1PRQ&s=19
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
“அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி”
https://twitter.com/ARMurugadoss/status/1740232862128124184?t=8sBCvd_u_y30nV17Qy6flw&s=19
இயக்குநர் மாரி செல்வராஜ்
“அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன். உங்களை மிஸ் செய்கிறோம் கேப்டன்”
https://twitter.com/mari_selvaraj/status/1740235212435640650?s=20
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
“சிறந்த நடிகர், தலைவர், சிறந்த மனித ஆன்மா இப்போது இல்லை..நீங்கள் என்றும் அழியாமல் இருப்பீர்கள், தமிழ்த் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் புன்னகையுடன் வாழ்வீர்கள். எங்கள் மதுரை மண்ணின் மைந்தன்… RIP சார்!”
https://twitter.com/karthiksubbaraj/status/1740255215406727455
நடிகர் நெப்போலியன்
“தேமுதிகவின் தலைவரும், நமது அன்பு அண்ணன் விஜய்காந்த் மறைவு செய்தி
கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம். அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் வாழ்வில் மறக்காது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!








