”முன்பே வா பாடல் என்னுடைய ஃபேவரட்” – ஏ.ஆர். ரகுமானிடம் தோனி கிண்டல்…….!

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ”முன்பே வா பாடல் என்னுடைய ஃபேவரெட், ரெய்னாவுடையது அல்ல” என்று ஏ.ஆர். ரகுமானை கிண்டல் செய்துள்ளார்.

19 வது ஐபிஎல் சீசன் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று சென்னை அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இதில் சென்னை அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட திரைக்கலைஞர்களும்  பங்கு பெற்றனர்.

அப்போது நடந்த இசை நிகழ்ச்சியில் ’முன்பே வா’’ பாடலை பாடிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அப்பாடல் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிடித்த பாடல் என்று கூறியிருந்தார்.

பின்னதாக ஏ.ஆர். ரகுமானிடம் பேசிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ”முன்பே வா பாடல் என்னுடைய ஃபேவரெட், ரெய்னாவுடையது அல்ல” என்று கிண்டல் செய்தார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சென்னை அணி வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக தான் பங்கேற்ற நேர்காணல்கள் சிலவற்றில் முன்பே வா பாடல் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் என்று  சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த சில்லுனு ஒரு காதல் படத்தில்  இப்பாடல் பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.