GOLD RATE | நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… சவரனுக்கு ரூ.5,000 வரை குறைந்த தங்கம் விலை……..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620-க்கும், சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நேற்றைய தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து ரூ. 12,950-க்கும், சவரனுக்கு ரூ.5,360 குறைந்து ரூ. 1,03,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.15 குறைந்து ரூ.235-க்கும், 1 கிலோ ரூ.15,000 குறைந்து ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.