முக்கியச் செய்திகள் தமிழகம்

மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை

நீலகிரி மாவட்டம் மசினகுடி T23 புலியை தேடும் பணி, 18 வது நாளாக தொடர்கிறது.

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், 20-க்கும் மேற்பட்ட அதிரடி படையினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, புதர்களில் பதுங்கியிருக்கும் விலங்குகளின் வெப்பநிலை மூலம் அவற்றை கண்டறியும் நவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையிலும் புலியை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

T23 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 17 நாட்களாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், 18வது நாளாக புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மாயார், மசினகுடி பகுதியில் கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வேளாண் சட்டத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு அரசு பொறுப்பேற்காது என கூற காரணம் என்ன? : சீமான் கேள்வி!

Saravana

தபால் ஓட்டை தவறவிட்டவர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது!

Gayathri Venkatesan

அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

Halley karthi