முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்; திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவ படுகொலைகள் தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என எம்.பி தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி காரணை சேர்ந்த கௌதமன் என்ற இளைஞர் பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், வீட்டிலிருந்து திடீரென கௌதமன் மாயமான நிலையில், சில நாட்களுக்குப் பின், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி கௌதமனின் உடலை உறவினர்கள் எரித்துள்ளனர். இந்த விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கையிலெடுத்ததும், கௌதமனை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கௌதமனை ஆணவக் கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் ‘தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கோரிக்கை என்னவென்றால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் ஆவணப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரபாகரன் என்ற இளைஞர் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முற்பட்டதால் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்தும் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் நரசமங்கலம் காலனியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் வன்னியர் சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டு பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக திருமணம் செய்ய மறுத்ததால் ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’என திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

எதிர்க்கின்ற வகையிலே சட்டங்களையும் கொண்டு வந்தால், எதிர்க்காமல் என்ன செய்வது? -சீமான்

Niruban Chakkaaravarthi

சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

Ezhilarasan

அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் இவருக்கு இவ்ளோ பாலோயர்களா?

Ezhilarasan