GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,720-க்கு, விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.5000 குறைந்து ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.