ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். அந்தவகையில் பாரா தடகள பிரிவில் இந்திய வீராங்கணை ஷர்மிளா தன்கர் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில் தங்கம் வென்ற ஷர்மிளா தன்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய பளுதூக்குதலில் மற்றுமொரு மகத்தான அத்தியாயம்! திறமைமிக்க மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவில் அசத்தலான செயல்திறனை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்று மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் மற்றும் தனது நான்காவது காமன்வெல்த் பதக்கத்தை வென்றுள்ள அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




