தமிழ்நாட்டில், திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல, எனவும் தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என கூறினார்.
அண்மைச் செய்தி: தோசை சுடும் சவாலை எதிர்கொண்ட, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
இது ஸ்டாலின் அரசு அல்ல என்றும், தமிழ்நாட்டு மக்களின் அரசு எனக் கூறிய அவர், நவீன தமிழகத்தை உருவாக்க பாடுபடும் பொற்கால ஆட்சி திமுகவுடையது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
https://twitter.com/mkstalin/status/1491779698656899072
பாஜகவிடம் அதிமுக பதுங்கியதால் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது என்று கூற ஓபிஎஸ், இபிஎஸ் தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







