நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கான பிரச்சாரங்களையும் அந்தந்த கட்சி பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாஜக, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஒரு கடையில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.
சென்னை வார்டு எண்:55-ல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது, சாலை ஓர உணவக கடையில் இருந்த நபர்களிடம் அவர் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு, உணவு தயாரிக்கும் மாஸ்டர் ஒருவர் தோசை சுடும் சவாலை விட்டதாகவும், அப்படி தோசையை சரியாக சுட்டால், தன்னுடைய ஓட்டை தங்களுக்கே செலுத்துவதாக கூறியுள்ளார்.
அதனால், அந்த சவாலை ஏற்று தான் தோசை சுட்டதாகவும், தான் சுட்ட தோசையை அவர்கள் விரும்பி ஏற்றதாகவும், சாவலை ஏற்றதால் அவர்களின் ஓட்டை செலுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும், அந்த கடை ஊழியர் தெரிவித்ததாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1491819968802922516?s=24
அண்மைச் செய்தி: உத்தரப்பிரதேச தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்காளர்களின் இடங்களுக்கே, சென்று அவர்கள் மேற்கொள்ளும் வேலைகளை அவர்களுடன் சேர்ந்து, செய்து அவர்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சி பிரதிநிதிகள் முயல்வது வழக்கம். அப்படி, அண்ணாமலை முயன்றுள்ள இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டியும் ரசித்தும் வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








