இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அடுத்தடுத்து அயர்லாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றிம் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பெயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலி மைதானத்தில் நடைபெருகிறது. அதேபோல 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொழும்புவில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெருகிறது
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சுப்மன் கில் தலைமை வகிக்கிறார்.
அணி விவரம்: ஷுப்மன் கில் (c), கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (wk), சாய் சுதர்சன், துருவ் ஜுரேல், ரவீந்திரஜடேஜா, குல்தீப்யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்
சாய் சுதர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பங்கேற்பு, பிசிசிஐ-யின் (BCCI) COE-விடமிருந்து பெறப்படும் உடற்தகுதிச் சான்றிதழைப் பொறுத்தே அமையும் என்றும்,
முதல் டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வுக்கு வாஷிங்டன் சுந்தர் கிடைக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.




