500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆலங்குடி கிராமத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதி வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது.

காளையார்கோவில் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கண்மாயில் இருந்து வெள்ள நீர் வெளியேறி விவசாய நிலங்களுகுள் புகுந்த நிலையில், 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு உரிய நிவாரனம் வழங்கி, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.