30 முதல் 40 ரூபாய் விலைக்கு வாங்கும் தக்காளி, ரூபாய் 100-க்கு மேல் விற்பனை; விவசாயி வேதனை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தக்காளி…

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? விவசாயிகள், வியபாரிகள் சொல்லும் தீர்வு என்ன? – “எகிறும் தக்காளி விலை” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை பல்வேறு பகிதிகளில் இருந்து வெளியிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நிலக்கோட்டை பாப்பநாயக்கன் பட்டி, பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியபாரிகள் கூறுவதாவது; “சுமார் 70 முதல் 80 நாட்கள் தக்காளியை அறுவடை செய்வோம். ஆனால், இந்த முறை எதிர்பார்த்த மகசூழ் இல்லை. 40 கூடைகள் 50 கூடைகள் வர வேண்டிய தக்காளி தற்போது 5 முதல் 10 கூடைகள் மட்டுமே கிடைக்கிறது. அதில், பாதி அழுகிவிடுகிறது.

எங்களிடம் 30 முதல் 40 ரூபாய் விலைக்கு வாங்கி 100 ரூபாய்-க்கு மேல் விற்பனை செய்கிறார்கள். இதனால், விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, வியபாரிகள் அதிக லாபத்தை சம்பாதிக்கிறார்கள்’ என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.