தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? விவசாயிகள், வியபாரிகள் சொல்லும் தீர்வு என்ன? – “எகிறும் தக்காளி விலை” என நியூஸ் 7 தமிழ், இன்று தொடர் நேரலையை பல்வேறு பகிதிகளில் இருந்து வெளியிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நெல்லை, களகுடி பகிதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியபாரிகள் கூறுவதாவது; “பருவமழை காரணமாகவும், இடைத்தரகர்கள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதுமே இதற்கு காரணம். பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், எங்களால் சரியாக செடிகளுக்கு உரம் வைக்க முடியவிலை. களை வெட்ட முடியவில்லை, இதனால் அதிக மகசூலையும் எடுக்க முடியவில்லை. இதானலும் விலை உயர்துள்ளது.
அதேபோல மழை தொடர்ந்து பெய்து வந்ததால் தக்காளி பூக்கள் செடியில் இருந்து விழுந்துவிட்டதும் மகசூழ் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம், அதை தாண்டி வளரும் தக்காளிகள் மழையில் அழுகிவிடுவதுமே வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு காரணம்” என நெல்லை, களகுடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.








