பாமக மற்றும் தவெகவின் கொள்கைகள் 90 % ஒன்று தான் – அன்புமணி ராமதாஸ் பேச்சு…!

தவெகவின் கொள்கையும், பாமகவின் கொள்கையும் 90 சதவிகிதம் ஒத்து போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் பாமகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் ஏராளமான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது ;

தேர்தலில் இரண்டு கட்சிகள் தான் தலை நிமிர்ந்துள்ளன. ஒன்று ஆட்சி பொறுபேற்றுள்ள தவெக. மற்றொன்று பாமக. திமுகவை வீழ்த்த வேண்டும் என அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். திமுகவை வீழ்த்தி உள்ளோம். இது பாமகவிற்கான மிகப்பெரிய வெற்றி. இன்னும் ஒரு சில இடங்கள் கூடுதலாக வென்று இருக்கலாம். ஆனாலும் 4 பேர் வெற்றி பெற்றுள்ளோம்.

நமது கூட்டணி விஜய்யின் தாக்கத்தினால் வெற்றி பெறமுடியவில்லை. இருந்தாலும் விஜயின் வெற்றியை நம் உதாசீனம் செய்து விட கூடாது. விஜய்க்கு வாக்களித்தவர்களை விமர்சனங்கள் செய்யகூடாது. வடமாவட்டத்தில் பாமக வலுமையான உள்ள இடத்தில் தவெக வெற்றி பெற முடியவில்லை.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான கொடுமை, கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தன. திமுக அமைச்சர்கள் காசு, பணம் என்றே ஆட்சி நடத்தினர். சென்னையில் திமுக படுதோல்வி அடைந்ததற்க்கும், கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி கண்டதற்கும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தான் காரணம்.

தேர்தலின் போது நிச்சயம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். தவெகவின் கொள்கையும், பாமகவின் கொள்கையும் 90 சதவிகிதம் ஒன்றாக தான் உள்ளது.

முதலமைச்சர் விஜயே குறிப்பெடுக்கும் வகையில் சவுமியா பேசி உள்ளார். பாமகவிற்கு எதிராகவும், பாகவிற்கு சின்னங்கள் முடக்குவதற்கும் திமுகவினர் சதி செய்தனர். திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் தான் பாமகவிற்கு எதிரான வழக்குகளில் ஆஜராகினர். இந்த தேர்தலில் பாமகவை சின்ன பின்னாமாக்கி விடலாம் என திமுக கணக்கு போட்டது. ஆனால் திமுக தான் மண்ணை கவ்வி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.