சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிளுக்கான பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 23 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை நிரப்புவதற்காக 19 பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
நீதித்துறை அதிகாரிகளான சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ். அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அதேபோல, வழக்கறிஞர்களான என். ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன் சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ. மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே. அப்பாதுரை, ஆர். அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலையடுத்து புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பிப்பார்.







