ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அவர் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரி தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சென்னை போலீசார் இன்று சம்மன் அளித்தனர். அந்த சம்மனில் வரும் ஜூலை 6-ந் தேதி ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.




