பெரு நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

பெரு நாட்டின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கெய்கோ புஜிமோரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, நடைபெற்ற பரபரப்பான தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் ராபர்டோ சான்செஸை (Roberto Sanchez) வீழ்த்தி அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், பெரு நாட்டின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கெய்கோ புஜிமோரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தலத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பெரு நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக கெய்கோ புஜிமோரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரு நாட்டுடனான நெருங்கிய நட்புறவை இந்தியா மிகவும் மதிக்கிறது. அத்துடன் பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. உங்கள் பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதுடன், இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவை மேலும் வலுவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.