முக்கியச் செய்திகள் குற்றம்

காவல் நிலையம் முன்பு இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கன்னியாகுமரி அருகே காவல் நிலையம் முன்பு இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே படுவூரை சேர்ந்தவர்கள் ஆன்சலின் சுரேஷ் மற்றும் கணேஷ்குமார். இவர்கள் மீது மணிகண்டன் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் தாக்குதல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இருவரும் கருங்கல் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மணிகண்டன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக, ஆன்சலின் மற்றும் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய போவதாக காவல்துறையினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையம் முன்பாக உள்ள கொடிக்கம்ப கயிற்றில் தூக்கிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அப்போது அருகிலிருந்த காவல்துறையினர் இருவரையும் காப்பாற்றினர். அதனைத் தொடர்ந்து ஆன்சலின் மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement:
SHARE

Related posts

சிறுவனை முட்டிய மாடு; வெளியானது சிசிடிவி காட்சி

Saravana Kumar

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Saravana

ஆயுத பூஜை சிறப்பு பேருந்து; போக்குவரத்துத்துறை அறிவிப்பு

Saravana Kumar