முக்கியச் செய்திகள் சினிமா

விஜய் ஜோடியாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் பரபரப்பு

’பீஸ்ட்’ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறாரா என்பது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ரஜினிகாந் துடன் அவர் நடித்த ’அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியானது. இயக்குநர் செல்வராகவனுடன் அவர் நடித்துள்ள ’சாணிக் காயிதம்’ விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்து ஆதியுடன் அவர் நடித்துள்ள குட்லக் சகி என்ற தெலுங்கு படம், இம்மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

அடுத்து மகேஷ்பாபு ஜோடியாக, ’சர்க்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’போலா ஷங்கர்’ படத்தில் சிரஞ்சீவி தங்கை யாக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், விஜய்-யின் அடுத்த படத்தில், அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்தி கள் வெளியானது. ’பீஸ்ட்’ படத்தை அடுத்து, விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் நாகார்ஜுனா, கார்த்தி நடித்த ’தோழன்’ படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கியவர். விஜய் நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கில் தில் ராஜூ தயாரிக்க இருக்கிறார்.

ஏற்கனவே விஜய்யுடன் பைரவா, சர்க்கார் படங்களில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை நடிகை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார். வம்சி இயக்கும் படத்திற்கு தான் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணும் மையம் வருபவர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம்!

Ezhilarasan

புதுச்சேரியில் ரங்கசாமி, நாராயணசாமி, வாக்களித்தனர்!

Gayathri Venkatesan

இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan