முக்கியச் செய்திகள் சினிமா

ஓடிடியில், மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’

தியேட்டரில் வெளியான மோகன்லாலின் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” மூன்று தேசிய விருதுகளைக் குவித்தது. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.

தமிழில் தயாரிப்பாளர் தாணு வெளியீட்டில் “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்” என்ற பெயரில் வெளியானது. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. வரும் 17 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது “மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்”.

Advertisement:
SHARE

Related posts

ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Nandhakumar

சிங்கார சென்னை 2.0 திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் – அமைச்சர் கே.என்.நேரு

Jeba Arul Robinson

திருவல்லிக்கேணியில் பரப்புரையை தொடங்கிய குஷ்பு!

Niruban Chakkaaravarthi