பொதுநல வழக்கு தொடுத்தவர் பட்டப்பகலில் கொடூர கொலை..!

திருக்கழுக்குன்றம்  பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக  கொலை செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி…

திருக்கழுக்குன்றம்  பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடுத்தவரை ஒரு கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக  கொலை செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில்
சென்று கொண்டிருந்த திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்த சர்புதீன்
என்பவர்  ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலைவெறி தாக்குதலுடன்
அறிவாளால் வெட்டியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலி
திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் கடந்த 2022 அன்று சர்புதீன்
என்பவர் திருக்கழுக்குன்றம் மார்க்கெட் தெரு மற்றும் மசூதி தெருவில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும்
அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளார்.

இதன் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்துள்ளார். அதன் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சர்புதீனுக்கு  கடந்த 24ஆம் தேதி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சர்புதீன்  காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் திருக்கழுக்குன்றம் மசூதி தெருவை சேர்ந்த சலீம் பாஷா என்பவர் தொலைபேசி வாயிலாக நாளை உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக இன்று சர்புதீன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆதரவாளர்களுடன் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துவிட்டு சென்னை திரும்பினர்.

இதனை அடுத்து திருக்கழுக்குன்றம் அடுத்த மங்களம் பகுதியில் உள்ள விருந்தகம் உணவகத்தில் உணவு அருந்திவிட்டு உடன் வந்தவர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் மாற்றுக்கார் கொண்டுவரதாக கூறி தனியாக காருக்கு சென்றவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து, கார் கதவை திறந்து சர்புதினை சரமாரியாக வெட்டியதில் சர்புதீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார்.

இது சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக  வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.