இரவு முழுவதும் இறைவனை நினைத்து ஆன்மீக இசையில் திளைத்த இஸ்ரேல் நாட்டினர்!

திருவண்ணாமலையில் இஸ்ரேல் நாட்டினர் இருவர் இரவு முழுவதும் பக்தி பாடலுக்கான இசையமைத்து மனமுருக இறைவனை வழிபட்டனர்.  பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும்…

திருவண்ணாமலையில் இஸ்ரேல் நாட்டினர் இருவர் இரவு முழுவதும் பக்தி பாடலுக்கான இசையமைத்து மனமுருக இறைவனை வழிபட்டனர். 

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு
மாதமும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.  இந்த கிரிவலத்தில் வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொல்வர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம்
அருகே இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரோஹித் மற்றும் பலராமன் ஆகிய இருவரும் கிட்டார் மற்றும் தபேலா ஆகிய இசைக் கருவிகளில் பக்தி பாடல்களுக்கான இசையைமைத்து மனமுருக இறைவனை வழிபட்டனர்.

இதையும் படியுங்கள்:  “அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கப் போவதில்லை” – லாலு பிரசாத்!

இருவரும் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை நினைத்து பக்தி பாடல்களுக்கான இசையை இரவு முழுவதும் இசைத்தனர்.  இச்சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.