இயற்கைக்கு மாறாகவும் மற்றும் ரயில்களில் மோதியும் யானைகள் இறந்துபோவதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
இது சம்மந்தமாக தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன் சி.பி.ஐ இணைந்து, யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் மற்றும் திருச்சியை சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடுத்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி. பாரதிதாசன் மற்றும் என். சதிஷ்குமார் அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலக்காடு மற்றும் கோயம்பத்தூர் இடையே ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து யானைகள் பலியாவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர், வனத்துறை, ரயில்வே துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளனர் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஏன் உத்தரவிடக்கூடாது என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பினர்.
அதன்பிறகு யானைகள் பலியாவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் தெற்கு ரயில்வே துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
– சத்யா விஸ்வநாதன்