சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14.870-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1.18.960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைபோல வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







