உத்தரபிரதேசம் : வேன் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேரில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்த துயர சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இது குறித்த போலீசார் விசாரணையில், வேன் ஓட்டுநர் அதிவேகமாக இயக்கியதால் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியது தான் விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்க்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.