IPL 2026 | ராஜஸ்தான், லக்னோ அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோத உள்ளன.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன.

பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இன்னும் ஒரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு உள்ள நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் அந்த வாய்ப்பை பிடிக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் மோத உள்ளன.

ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகும். அதேவேளை, லக்னோ பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.