முக்கியச் செய்திகள் இந்தியா

லாவகமாக பாம்பு பிடிக்கும், பெண் வனத்துறை அதிகாரி: வைரலாகும் வீடியோ

கேரளாவில், பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், பாம்பை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டக்கடை பகுதியை சேர்ந்த ஐசக் என்பவரின் வீட்டின் பின்புறம் நாகப்பாம்பு இருந்துள்ளது. இது குறித்து வனதுறை அதிகாரிகளுக்கு ஐசக் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவம் இடம் வந்த பெண் வனத்துறை அதிகாரி ரோஷினி, சரியான உபகரணங்களுடன் நாகப்பம்பை பிடித்து வனத்தில் கொண்டு விட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோன்று, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ், பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். சிறிய பாம்புகள் முதல் கரு நாகப்பாம்பு உள்ளிட்ட அரியவகை பாம்புகளை பிடிப்பதோடு மட்டுமல்லாது பாம்பு பிடிப்பது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருவார்.

அண்மைச் செய்தி: சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் நல்ல பாம்பு ஒன்றை பிடிக்க முயன்றபோது வாவா சுரேஷை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாவா சுரேஷ் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாகவும், மோசமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக கோமாவில் இருந்து மீண்டுள்ளதாகவும், சில வார்த்தைகள் பேச ஆரம்பித்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்”

Gayathri Venkatesan

மது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு!

Gayathri Venkatesan

செங்கல்பட்டு என்கவுண்ட்டர்: கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வு

Arivazhagan CM