திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நியாயத்தையும் நீட் தேர்வையும் ஒருங்கே கொண்டிருக்க முடியாது. நீட் தேர்வு அடிப்படையிலேயே நியாயமற்றது.
என்னால் எல்லா மாநிலங்களுக்காகவும் பேச முடியாது. ஆனால் தமிழ்நாட்டிற்காக பேச முடியும். பாஜகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் நீட் தேர்வை எதிர்க்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பலமுறை தீர்மானங்களையும் மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளது. நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்போம். நாளை எனது தலையங்கத்தைப் பாருங்கள்.
அதில், நீட் ஏன் அடிப்படையில் நியாயமற்றது என்பதையும், அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் நான் விரிவாக விளக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.




