இந்தோநேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபயாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசருக்குக் 250-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கே.எம்.பி
முதியாரா செந்தோசா 2 என்ற கப்பல் சென்றுகொண்டிருந்தது. அப்போது மதுரா தீவுக்கு அருகே சென்ற போது கப்பலில் திடீரென தீப்பிடிதது. இதுகுறித்து கப்பலின் கேப்டன் தகவல் அலித்ததும் பலரும் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு கடலில் குதித்தனர்.
இதனையடுத்து அருகில் இருந்த சில கப்பல்கள் தகவலறிந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் மாயமாகி உள்ள்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் மாயமானவர்களை மீட்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.




