டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் ராகுல் காந்தி எழுப்பிய பல்வேறு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக பதில் அளித்தார். கூறியதாவது:
நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல தேர்வுகளில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக ஏன் ராகுல் காந்தி கேள்வி எழுப்பவில்லை..? குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் மட்டும் அவர் கேள்வி எழுப்புவது ஏன்..?
காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களிலும் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடந்துள்ளது. அப்போது ராகுல் காந்தி ஏன் கடுமையாக விமர்சிக்கவோ கேள்வி எழுப்பவே இல்லை…?
தற்போது, நீட் தேர்வு வினாத்தாள் வெளியான முறைகேடு விவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் நீட் வினாத்தாள் வெளியான விவகார தொடர்பாக விவாதம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை மணி நேரம் விவாதம் நடத்த வேண்டும் என்றாலும் மத்திய அரசு விவாதம் நடத்த தயாராக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து அவர் சோனம் வாங்சுக் மத்திய அரசுக்கு எழுதி இருந்த கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும் அந்த கடிதத்தை முழுமையாக ஆய்வு செய்து அது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.




