உலக அளவில் ஸ்பைடர்மேன் படங்களுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். 5 ஆண்டு இடைவெளிக்குபின் வந்திருக்கிறது ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே. டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிப்பில் வந்திருக்கும் இந்த ஸ்பைடர்மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?
நியூயார்க் நகரில் வசிக்கும் ஸ்பைடர்மேன் தனது காதலி, நண்பர்களை ஒரு இடத்தில் பார்த்து பீல் ஆகிறார். அவர்களின் நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டதால், தன்னை கண்டுபிடிக்க முடியவில்லையே என ஏங்குகிறார். இதற்கிடையே, காதலியுடன் ஒரு ஆண் நண்பர் இருக்க, அவரின் கோபம் அல்லது விரக்தி அதிகமாகிறது. அதனால், அவரின் செயல்கள், ஜீன்கள் பாதிக்கப்பட, ஸ்பைடர்மேன் ஆக மாறும்போது ஆக்ரோசம் அதிகமாகிறது. அது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் தனது சகோதரியை இழந்து தவிக்கும் வில்லி சேடி ‘விமாக்ஸ்’ என்ற ரகசியத்தை தேடுகிறார். தனது வசியம், உளவியல் ஆற்றலாம் பலர் மனதில் புகுந்து சிட்டியில் கலவரத்தைபாதிப்பை ஏற்படுத்துகிறார். அவரை ஸ்பைடர்மேன் கட்டுப்படுத்தினாரா? சேடி அக்காவுக்கு என்ன ஆனது. ஸ்பைடர்மேன் காதலி, நண்பனுக்கு பழைய நினைவு வந்ததா என்பதை இந்த பாகத்தில் பிரமாண்டம், ஆக் ஷன், சாகசம், காதல், உணர்வுகள், அக்கா, தங்கை பாசம், திருப்பங்கள் கலந்து சொல்லியிருக்கிறார்கள்
ஸ்பைடர் மேன் ஆக வரும் டாம்ஹாலண்ட் வரும் சீன்கள் ரசிகர்களுக்கு விருந்து, குறிப்பாக, அந்த காஸ்ட்யூமுக்கு மாறி அவர் பறக்க ஆரம்பித்தால், சண்டை செய் ய ஆரம்பித்தால் இன்னும் கூடுதல் விருந்து. காதலியை பார்த்தவுடன் பீல் பண்ணுவது. நண்பனிடம் தன்னை அறிமுகப்படுத்தாமல் பேசுவது, ஹல்க்குடன் மோதல், ஒரு பெரிய வாகனத்தை கட்டுப்படுத்தும் ஆக் ஷன் சீன், கிளைமாக்ஸ் நிஞ்சா சண்டை, பல சென்டிமென்ட் சீனில் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, நியூயார்க் நகரில் அவர் பறக்கும் காட்சி, சண்டைகாட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. மற்ற பாகத்தை விட இதில் பாசம், சென்டிமென்ட் அதிகம். அதுவும் பலருக்கு பிடிக்கும். என்ன பல இடங்களில் அதிகம் நேரம் பேசிக்கொண்டே இருப்பது மைனஸ். கொஞ்சம் மெர்ச்சூடாக நடித்து இருக்கிறார். அவரின் மனஅழுத்தம், மனநிலை, உடல்நிலை மாற்றம், கடைசியில் தனது அத்தை நினைவுகள் வழியாக சில விஷயங்களை செய்வது டச்சிங்.
ஹீரோயினாக வரு் ஜெண்டயா, வில்லியாக வரும் சேடி இரண்டுபேரும் மிரட்டியிருக்கிறார்கள். ஸ்பைடர்மேன் காதல் காட்சிகள், அவருடன் காதலி இருக்கும் இடங்கள் கியூட், வில்லியாக வரும் சே டிக்கு நல்ல வேடம்.அக்காவை தேடி செல்வது. அவருக்கு என்ன நடந்தது என கண்டுபிடிப்பது, அந்த கோபத்தில் பொங்குவது, தன் தரப்பை நியாயத்தை கேட்டு அழுவது என கலக்கியிருக்கிறார். அவருக்கு ஸ்பைடர் மேனுக்கும் நேரடி சண்டை இல்லாவிட்டாலும் அவர் செய்யும் யுக்தி, அந்த உளவியல் பாலிசி பிரமாதம்.
அதேபோல், ஹல்க் சீன், அவருடன் ஸ்பைடர்மேன் மோதல் படத்துக்கு பிளஸ். அவர் சம்பந்தப்பட்டபிளாஷ்பேக், அவர் வி மாக்ஸ் ரகசியத்தை தெரியும்முறை, கோபத்தில் பொங்குவது சூப்பர்.
ஹீரோ, ஹீரோயின், வில்லி, மற்ற கேரக்டர் என அனைத்திலும் ஒரு புது விஷயம் இருக்கிறது. ஒவ்வொரு கேரக்டருக்கு நடிக்க வாய்ப்பு இருக்கிறது. சில சமயம் தொய்வு ஏற்படுகிறது. அடுத்த சீனில் அதை சரி செய்கிறார் இயக்குனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்வகையில் திரைக்கதை, அந்த பிரமாண்டம் இருக்கிறது. ஆக் ஷன் விரும்பிகளுக்கு இன்னும் பிடிக்கும். மனித உணர்வுகளை, டெலிபதியை, சிப் போன்ற அறிவியல் விஷயங்களை பேசுவது புதுமை
படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், பல உணர்வுப்பூர்வமான விஷயங்களை கதை பேசுகிறது. கடைசிய அரை மணி நேரம் கிளைமாக்ஸ். அடுத்து நடக்கும் விஷயங்கள், ஸ்பைடர்மேன் சொல்லும் நீதி இதெல்லாம் கமர்ஷியல் படத்திலும் ஒரு கதையை சொல்கிறது. குறிப்பாக, ஒளிப்பதிவு, சிஜி வொர்க், இசை பிரமாதம். மற்ற பாகங்களை விட இதில் நியூயார்க் நகரம், ஸ்பைடர் சாகசங்களை அதிகமாக, விரிவாக காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளிலும் அனல் பறக்கிறது. ஒவ்வொரு சண்டையும் ஒவ்வொரு விதம். முந்தைய படங்கள், பழைய கதைகள் தெரிந்தவர்களுக்கு இந்த படம், இதில் சொல்லப்படும் விஷயம். இதில் வரும் கேரக்டர்கள் ரொம்பவே கனக்ட் ஆக இருக்கும். முதன்முறை இந்தபடம் பார்த்தால் சில விஷயங்கள் புரியாது. ஆனாலும், உலகளாவிய படம் என்றாலும் உள்ளூர் மக்களும் ரசிக்கும்வகையில் பல கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நல்ல தியேட்டர் அனுபவத்தை கொடுத்து இருக்கிறார்கள். இந்த கதை, சாகசங்கள், சண்டை பல ஆண்டுகள் நம் நினைவில் நிற்கும். படம் முடிந்தவுடன் மார்வல் பாணியில் அடுத்த படத்துக்கும் லீடு கொடுத்து சர்ப்பிரைஸ் செய்து இருக்கிறார்கள்
சிறப்பு செய்தியாளர்: மீனாட்சி சுந்தரம்




