“தவெக அரசு செய்வது only reels தான் no rules!” – சீமான்

தவெக அரசு வெறும் விலம்பர அரசியலையே செய்கிறது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய உறவுகள் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “திரள் நிதியை மக்களிடம் தான் கேட்க முடியும்; நீங்கள் மக்களிடம் ஓட்டு கேட்பதில்லையா. திரள் நிதி காசில் ஒரு டீ கூட குடிச்சது இல்லை; சீமான் பென்ஸ் கார் வாங்கிட்டார்னு சொல்றாங்க. நாளைக்கு ஃப்லைட் வாங்கி ஓட்டப்போறேன்.

நான் துரைமுருகனிடம் சொன்னென், நாம் செய்வது எது எது எரிச்சலாக இருக்கிறதோ அதையே செய்ய வேண்டும். நாம் பேசுவது அவர்களுக்கு எரிச்சலாக இருந்தால் தொடர்ந்து பேச வேண்டும்.

முதலமைச்சர் ஆனதும் ஜோசப் விஜய் என்று போட்டுக்கொள்கிறார். முதல் திரைப்படத்திலிருந்தே ஜோசப் விஜய் என்று போட்டிருக்க வேண்டியதுதானே. நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது; பெரம்பூரில் நின்றதுக்கு பின்னால் இருப்பது மதம். திருச்சி கிழக்கில் நின்றதுக்கு பின்னால் இருப்பது மதமும் சாதியும் தான்.

தமிழ்நாட்டில் சில சொற்கள் மதிப்பிழந்து கேவலப்படுகிறது. மாற்றம், புரட்சி, தளபதி, வரலாறு இந்தச் சொற்களெல்லாம் அவமானப்படுகிறது. தளபதி என்றால் எந்தப் படைக்கு தளபதி; சொறிசிரங்கு படையா?. போதைப்பொருளை ஓடி ஒழிக்க கூடாது, தேடி ஒழிக்கனும். திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டு காலம் வெறும் விளம்பர அரசியல் மற்றும் தேர்தல் அரசியலைத் தான் செய்தது. அதையேதான் முதலமைச்சர் விஜய் செய்கிறார். தவெக அரசு செய்வது only reels தான் no rules” அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.