சென்னை மணலியில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை மணலியில் இருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய டயர்களை புதுக்கோட்டைக்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓட்டுநர் முத்து தமிழ்ச்செல்வன் என்பவர் இயக்கி கொண்டு வந்திருந்த போது லாரி சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலை சீனிவாசபுரம் அருகே திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை விட்டுவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது மளமளவென தீ முழுவதும் பற்றி எரிந்து லாாி தீயில் கருகியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் போில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
—கா. ரூபி







