பெண்களைப் பத்தி அசிங்கமா பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் – முதலமைச்சர் விஜயா வேசம்!

பெண்களைப் பத்தி யாராவது அவதூறாவோ, அசிங்கமாவோ பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியதும், காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர் திமுக மீது அடுக்கடுகான குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன்வைத்தார்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து முதலமைச்சரின் உரை முடிந்ததும் திமுகவினர் எதிர்கட்சித் தலைவர் பேச அனுமதி கோரினர்.

இதற்கு சபாநாயகர், “முதலமைச்சர் பேசி முடித்ததும் அனுமதி வழங்கலாம் என்று தான் இருந்தேன் ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே முதலமைச்சரின் பேச்சை தடுக்கும் நோக்கத்தோடு அமளியில் ஈடுபட்டதால அனுமதி வழங்க முடியாது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு எதிர்க்கடசித் தலைவர் பேச அனமதி வழங்கக் கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். இருந்தும் திமுகவினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வந்தனர்.

இதனிடையே முதலமைச்சர் விஜய், திமுகவினர் பேச அனுமதி வழங்குங்கள் என்று பரிந்துரைத்தார். இதனையடுத்து அனமதி வழங்குவதாக கூறி திமுகவினரை அவரவர் இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பேசும்போது அதனை தடுக்கும் வகையில் நீங்கள் செயல்பட்டதாலேயே அனுமதி வழங்கப்பட வில்லை என்று கூறினார்.

அப்போது திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி வழங்கப்படாது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனையடுத்து திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.