“எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை” – முதலமைச்சர் விஜய் விளக்கம்!

எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர,

அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.